NASA விங்ஞானிகள் மறைக்கும் உண்மை? சூரிய குடும்பத்திற்குள் வந்து செல்ல கூடிய மர்மப்பொருள்! 3I/ATLASபற்றிய யாரும் சொல்லாத ரகசியம் !

0

3I/Atlas



அண்டவெளியில் (Cosmos) நம் சூரியகுடும்பம் என்பது ஒரு சிறு துளி. இந்த துளியை தாண்டி கோடிக்கணக்கான விண்மீன் குடும்பங்கள் உள்ளன. இப்படிபட்ட தூரத்து உலகத்திலிருந்து நம்மை பார்க்க வந்த ஒரு அரியவகை விருந்தாளி தான் 3I/ATLAS என்கிற வான்பொருள். இதன் அளவு சுமாராக 0.3-5.6km வரை இருக்கலாம்.

 3I/ATLAS என்றால் என்ன?

• '3I' - என்பது ஒரு விண்மீன் மண்டலத்திலிருந்து நமது சூரியக்கூடும்பதிற்குள் நுழைந்த மூன்றாவது பொருள் என்பதை குறிக்கிறது. 

• இதற்கு முன்பு 1I/oumuamua மற்றும் 2I/borisov  ஆகிய இரண்டு பொருட்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.

• இது 2025 ஆண்டு ஜூலை 1 தேதி ATLAS தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டது.

• இந்த வால்மீன் சுமார் 700கோடி ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பூமியின் வயதைவிட இருமடங்கு ஆகும்.

3I/ATLAS எவ்வாறு வால்மீன் மற்றும் விண்கல்லில் இருந்து வேறுபடுகிறது?

வால்மீன் (comet):  

✓ இது பொதுவாக பனி, தூசி மற்றும் கல் ஆகியவை கலந்த பெரிய விண்வெளிப்பொருள். வால்மீன்களின் கரு(nucleus) பொதுவாக 1km முதல் 10km வரை அகலம் கொண்டது.

✓ சில சிறிய வால்மீன்கள் 100m மற்றும் பெரியவகை (HALEBOP) 40km மேல் இருக்கலாம்.

✓ வால்மீனின் வால் கோடிக்கணக்கான கிலோமீட்டர் வரை நீளம் இருக்கலாம். ஆனால், அதன் கருவே(nucleus) அதன் உடல்.

விண்கல் (asteroid):

✓ விண்கல் என்பது சூரியனை சுற்றி சுழலும் பெரியகல் அல்லது உலகப்பொருள். இது வால்மீன்போல் பனி இல்லாமல், பெரும்பாலும் உலோகம் மற்றும் கல் கொண்டு ஆனது. இவை சிறு கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

✓ இவற்றின் சராசரி அளவு 10m முதல் சில கிலோமீட்டர்கள் வரை இருக்கும். மிகப்பெரிய asteroid ( CERES) சுமார் 940km வரை இருக்கலாம் என கருதப்படுகிறது.

 3I/ATLAS (interstellar object)

• வால்மீன் மற்றும் விண்கற்கள் சூரியனை சுற்றி சுழல்கின்றன. ஆனால்,  3I/ATLAS வேறு நட்சத்திர மண்டலத்திலிருந்து நேராக நமது சூரியக்குடும்பதை கடந்து செல்கிறது.

• இதன் இயக்கபாதை (orbit) "hyperbolic path" என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒருமுறை உள்ளேவந்து திரும்பாது.

•  3I/ATLAS- அமைப்பில் பனி மற்றும் தூசி உள்ளன என்பதால், இது தோற்றத்தில் வால்மீன் போன்று உள்ளது. ஆனால் அது தோன்றிய இடம் (origin) மற்றும் பாதை (orbit path) காரணமாக இது ஒரு "interstellar comet" என கருதப்படுகிறது.

வேற்று உயிரின விண்கலமா?

• அமெரிக்காவின்  HARVARD UNIVERSITY வானியலாளர் பேராசிரியர் AVILOEB இது முழுமையாக இயற்கையானது அல்ல என " Is the interstellar object  3I/ATLAS Alien Technology?" என்ற ஆய்வு கட்டுரையில் ஒரு விமர்சன சிந்தனையாக (thought experiment) கூறியுள்ளார்.

• NASA மற்றும் உலக விஞ்ஞானிகள் இதை முற்றிலும் வால்மீன் போன்ற பொருள் என உறுதிப்படுத்தியுள்ளனர். இதில் எந்த செயற்கை அமைப்போ சிக்னலோ , இயக்கமுறையோ இதுவரை கண்டறியப்படவில்லை. எனவே இது ஒரு வேற்று உயிரின விண்கலமாக இருக்க வாய்ப்புகள் குறைவு என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

• பொதுமக்களிடையே ஆர்வத்தை தூண்டினாலும், விஞ்ஞான அடிப்படையில் வேற்று உயிரின விண்கலம் (alien craft) என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

தற்போதைய நிலை

• விண்மீன் குழு (Constellation) இது கன்னி (Virgo) விண்மீன் குழுவில் காணப்படுகிறது.
பூமியிலிருந்து தூரம்: இது தற்போது பூமியிலிருந்து சுமார் 341 மில்லியன்  தொலைவில் உள்ளது.

 • அக்டோபர் 30, 2025 அன்று, சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புள்ளியை (perihelion) அடைந்தது. அப்போது அது செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குச் சற்று உள்ளே இருந்தது.

• 3I/ATLAS- சூரியனுக்கு மிக அருகில் சென்று கொண்டிருப்பதால், பூமியில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் இதை இப்போது பார்ப்பது சாத்தியமற்றது (solar conjunction) . நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் அல்லது டிசம்பரின் தொடக்கத்தில் இது மீண்டும் பூமியிலிருந்து பார்க்கக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top