Actor Ajithkumar
வேலுசாமிபுரத்தில் TVK தலைவர் விஜய் பொதுக்கூட்டம் நடத்தினார்.
அங்கு கூட்டம் நெரிசலானது.
நீர், உணவு, வெளியேறும் பாதை போன்ற வசதிகள் இல்லாததால் மக்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் நெரிசல் விபத்து நடந்து, பலர் மிதிபட்டு காயமடைந்தனர், சிலர் உயிரிழந்தனர்.
மொத்தமகா 41 பேர் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் கரூருக்கு சென்று நிலைமை ஆய்வு செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக CBI விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இனிமேல் இத்தகைய கூட்டங்களில்
பாதுகாப்பு ஏற்பாடுகள் நன்றாக செய்யப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அவர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல் ஒன்றில் கரூர் துயர சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார்.
• அவர், நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல.நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு.
• கூட்டம் திரட்டுவதை பெரிய விஷயமாக்குவதை நிறுத்த வேண்டும். கிரிக்கெட்டில் கூட்டம் கூடினாலும் இப்படி நடப்பதில்லை. தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி, பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் மட்டும் ஏன் இப்படி? இது நம் திரையுலகை உலகளவில் தவறாகக் காட்டுகிறது.
• ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம். ஆனால், உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம். அன்பை காட்ட வேறு வழிகள் உண்டு.
• முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது. ஊடகங்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

